Karnataka | பெண்களிடம் ஆபாச செயல் செய்த டிஜிபி - கர்நாடக CM ஆபீஸ் வரை தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ
கர்நாடகாவில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி, தனது அலுவலகத்தில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக சித்தரிக்கப்படுள்ளது. ஆனால் வீடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுப்படவில்லை. ராமச்சந்திர ராவின் மகளும் நடிகையுமான ரன்யா ராவ், தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராமச்சந்திர ராவ், சிறிது நாட்களில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் ஆபாச செயல் விவகாரம், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அலுவலகத்தை எட்டியதை அடுத்து, ராமச்சந்திர ராவ் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
Next Story
