Congress Politics | "காலம்தான் பதில் சொல்லும்" - டெல்லி சென்றவர் ராகுல், கார்கேவுடன் சந்திப்பு
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் மீண்டும் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் உட்கட்சிக்குள் அதிகார பகிர்வு தொடர்பாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா என இரு பிரிவுகள் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், டெல்லி சென்று இருந்த டி.கே.சிவக்குமார் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த டி.கே.சிவகுமார், தாம் அது குறித்து விவாதிக்கவில்லை என்றும், தலைமையிடம் விவாதித்ததை வெளியே சொல்ல முடியாது என்றும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்."
Next Story
