

கர்நாடக மாநிலம், பெங்களூர் ஜேபி நகரைச் சேர்ந்த சையத் தமது குடும்பத்தினருடன் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அத்திப்பள்ளி என்ற இடத்தில் கார் சென்றபோது திடீரென காரில் தீ பிடித்தது. காரில் புகை வந்ததை கவனித்தவுடன், அவசர அவசரமாக காரை விட்டு இறங்கியதால் அவர்கள் உயிர் தப்பினர் . ஆனைக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.