கர்நாடகாவில் விபத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் - கார் விபத்தில் அமைச்சர் மகனுக்கு தொடர்பா?

கர்நாடகாவில் 2 பேர் உயிரிழந்த கார் விபத்தில் அமைச்சர் மகனுக்கு தொடர்புள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் விபத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் - கார் விபத்தில் அமைச்சர் மகனுக்கு தொடர்பா?
Published on

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்று தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். காரை கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோக்கின் மகன் ஓட்டியதாக தகவல் வெளியானது. ஆனால் போலீஸ் தரப்பில் எந்தவித உறுதியான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வழக்கிலும் அமைச்சரது மகனின் பெயர் இடம்பெறவில்லை. இதனிடையே விபத்தை ஏற்படுத்தியது அமைச்சரின் மகன்தான் என்பது போல காங்கிரஸ் தரப்பில் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியானது. இந்த கார் விபத்து விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் எம்எல்ஏ மகன் மற்றொரு விபத்தை ஏற்படுத்தியதாக விவகாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com