"ஒரு வருங்கால கணவன் இப்படி பண்ணுவானா?" - கடிதம் எழுதிவைத்து நிச்சயமான பெண் த*கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து பணம் பறித்து ஏமாற்றியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். ஷாலினி - ராகுல் ஆகியோருக்கு 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடத்துள்ளது. இதையடுத்து ராகுல், ஷாலினியிடம் பேசி சிறுக சிறுக பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் ஷாலினி, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், வருங்கால கணவர் என்ற எண்ணத்தில் பணத்தை கொடுத்ததாகவும் ஆனால் பணத்தை வாங்கி கொண்டு வேறு விதமாக பேசுவதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், தற்கொலைக்கு ராகுலும் அவரது குடும்பத்தினருமே காரணம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com