கொத்தனஹள்ளி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் இருந்து வன விலங்குகள், அவ்வப்போது ஊருக்குள் புகுவது வாடிக்கையாகும். இந்நிலையில், நேற்று, பொன்னப்பா என்ற விவசாயியின் தோட்டத்திற்குள் புகுந்த பெண் யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டு குட்டி ஒன்றை ஈன்றது. ஆனால் பிறந்த சில நிமிடத்திலேயே குட்டி யானை உயிரிழந்தது. இதனால் தாய் யானை அங்கிருந்து செல்லாமல், இறந்து கிடந்த குட்டியையே கண்ணீர் சிந்தியப்படி சுற்றி சுற்றி வந்தது.