சட்டப்பேரவையில் பெண்களின் படத்தை பார்த்த எம்எல்ஏ - சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவும் வீடியோ

கர்நாடக குளிர்கால சட்டமன்ற கூட்டத் தொடரின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பெண்களின் படங்களை பார்த்துக் கொண்டிருந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.
சட்டப்பேரவையில் பெண்களின் படத்தை பார்த்த எம்எல்ஏ - சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவும் வீடியோ
Published on

கர்நாடகாவில் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் பெலகாவியில் நடந்து வருகிறது. கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் அவையிலிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ மகேஷ் தனது செல்போனில் பெண்களின் படங்களை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. சர்ச்சைக்குள்ளான எம்எல்ஏ மகேஷ், கல்வித்துறை அமைச்சராக இருந்து அண்மையில் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது அவையில் பாஜக அமைச்சர்கள் இருவர் ஆபாசமான படங்களை பார்த்துக் கொண்டிருந்த காட்சி வெளியாகி அவர்கள் பதவியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

X

Thanthi TV
www.thanthitv.com