கர்நாடக சட்டப்பேரவை வரும் புதன்கிழமை வரை ஒத்திவைப்பு

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் குமராசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். மேலும், விவாதம் எதுவுமின்றி சட்டப்பேரவை இன்று முதல் புதன்கிழமை வரை ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com