கை கொடுக்க வந்த எடியூரப்பா - கைகூப்பி புறக்கணித்த அமித்ஷா?
கர்நாடக மாநில பாஜகவிற்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், தம்மிடம் கை கொடுக்க வந்த எடியூரப்பாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புறக்கணிப்பது போல் நடந்து கொண்டதாக வெளியாகி இருக்கும் செய்தி அரசியல் கவனம் பெற்றுள்ளது. கை கொடுக்க வந்த எடியூரப்பாவிற்கு கை கொடுக்காமல் கை கூப்பி அமித்ஷா வணங்கியுள்ளார். அதோடு, காட்டமான முகத்துடன் அவரை நோக்கி இரண்டு கைகளையும் ஆசிர்வதிப்பது போல வைத்து நன்றி என கூறி அமித்ஷா சென்றிருப்பது கர்நாடகா அரசியலில் கவனிக்கத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது
Next Story
