கம்பாளா பந்தயத்தில் மற்றொரு சாதனை : உசேன் போல்டை மிஞ்சிய வீரரின் சாதனை தகர்ப்பு/

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா பந்தயத்தில் உசேன் போல்டை மிஞ்சியதாக கூறப்படும் ஸ்ரீநிவாச கவுடாவின் சாதனையை மற்றொரு வீரர் ஒருவர் முறியடித்துள்ளார்.
கம்பாளா பந்தயத்தில் மற்றொரு சாதனை : உசேன் போல்டை மிஞ்சிய வீரரின் சாதனை தகர்ப்பு/
Published on
ஸ்ரீநிவாச கவுடா, கம்பாளா பந்தயத்தில் 100 மீட்டரை 9 புள்ளி 55 விநாடிகளில் கடந்தததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் வீனூரில் நடைபெற்ற மற்றொரு கம்பாளா பந்தயத்தில், நிஷாந்த் ஷெட்டி என்ற வீரர் 100 மீட்டரை 9 புள்ளி 51 விநாடிகளில் கடந்து ஸ்ரீனிவாச கவுடாவின் சாதனையையே முறியடித்துள்ளார். ஏற்கனவே ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி பெறுமாறு மத்திய அரசு அளித்த வாய்ப்பை ஸ்ரீநிவாக கவுடா நிராகரித்த நிலையில், தற்போது மற்றொரு வீரர் புதிய சாதனை படைத்துள்ளார். எனினும் கம்பாளா பந்தயமும், ஓட்டப்பந்தயமும் வெவ்வேறு விளையாட்டு என்றும், இரண்டையும் ஒன்றோரு ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் விளையாட்டு துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com