பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கைதான மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் விடுவித்ததை கண்டித்து இந்து அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 2 நாட்களுக்கு முன்பு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவு குரல் எழுப்பியதாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப் பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து அமைப்பினர் நகர காவல் நிலையம் அமைந்துள்ள சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.