போதையில் பாம்பை கடித்து துப்பிய நபர் - கர்நாடகாவில் நடந்த விநோத சம்பவம்

கர்நாடகாவில் போதை ஆசாமி ஒருவர் பாம்பை கடித்து துப்பிய விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் பாம்பை கடித்து துப்பிய நபர் - கர்நாடகாவில் நடந்த விநோத சம்பவம்
Published on

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டதை தொடர்ந்து நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கோலார் மாவட்டம் மத்தூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் மதுக்கடைக்கு சென்று மதுவை வாங்கி வைத்து குடித்து வந்தார். இன்று மீண்டும் காலையில் போதையில் வந்த போது சாலையின் நடுவே பாம்பு ஒன்று சென்றுள்ளது. தன்னுடைய இருசக்கர வாகனத்தை மறித்துக் கொண்டு சென்ற அந்த பாம்பை பிடித்த குமார், அதை தன் பற்களால் கடித்து துப்பினார். ஆனால் அந்த பாம்பு விஷத் தன்மை இல்லாமல் இருந்ததால் குமாருக்கு அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இந்த காட்சிகளை ஒருவர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதை தொடர்ந்து இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com