Karaikal FisherMen | Andhra Pradesh | காரைக்கால் மீனவர்கள் எடுத்த அதிரடி முடிவு

x

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில், ஆந்திர கடற்பரப்பில் இனி மீன் பிடிக்க கூடாது என்றும், தமிழக கடலோர பகுதியில் ஐந்து நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடிக்க அறிவுறுத்தப்பட்டும் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை மீறியவர்கள் மீது, ஒரு மாதம் கால தொழில் முடக்கமும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் ஆந்திர மீனவர்கள் , காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, நான்கு விசைப்படகுகளை பறிமுதல் செய்த நிலையில், இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்