சரக்கை உள்ளே இறக்கிவிட்டு காசு கேட்டதும் கடையை சூறையாடிய நண்பர்கள்.. கேப்பில் செய்த திருட்டு வேலை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் உள்ள டாஸ்மாக்கில் அரங்கேறிய இந்த சம்பவத்தில், முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த ஆல்பின்டொமின் என்ற இளைஞர் மதுபோதையில் அத்துமீறி தகராறு செய்திருக்கிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஆல்பின்டொமின் , சிக்கன், ஆம்லேட் என சுமார் 500 ரூபாய்க்கு மேல் சைடிஸ் ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், பணம் கொடுக்க மறுத்து தகராறு செய்திருக்கிறார். இதை தட்டிக்கேட்ட பார் ஊழியர்களை இளைஞர்கள் தரப்பு சரமாரியாக தாக்கிய நிலையில், பாரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த குடிமகன்களையும் சேர்த்து தாக்கி டாஸ்மாக்கை சூறையாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com