Kannur || வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாவலி ஆற்றின் தடுப்பணை...

x

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாவலி ஆற்றின் தடுப்பணை

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில், கொட்டியூர் பாவலி ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு கட்டப்பட்டிருந்த தற்காலிக தடுப்பணை, கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. பிரசித்தி பெற்ற கொட்டியூர் மகாதேவர் கோவிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பாவலி ஆற்றில் தற்காலிக தடுப்பணை கட்டப்பட்டிருந்தது. இங்கு பெயத கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தடுப்பணை அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்