ஐயப்பனை தரிசித்ததில் பின்னணியில் யாரும் இல்லை - சபரிமலை சென்ற கனகதுர்கா விளக்கம்

சபரிமலை கோவிலுக்குள் சென்று அய்யப்பனை தரிசனம் செய்தது தமது சுய முயற்சி என்றும், பின்னணியில் எதுவும் இல்லை என, கனகதுர்கா கூறியுள்ளார்.
ஐயப்பனை தரிசித்ததில் பின்னணியில் யாரும் இல்லை - சபரிமலை சென்ற கனகதுர்கா விளக்கம்
Published on
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சபரிமலை சென்று தரிசனம் செய்த கனகதுர்கா செய்தியாளர்களிடம் பேசிய போது, பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு நடந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.தாம் ஏற்கனவே நக்சலைட் ஆதரவாளர் என்றாலும் தற்போது எந்த அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என தெரிவித்துள்ளார். சபரிமலை சென்றதன் பின்னணியில் கட்சியோ, அமைச்சர்களோ இல்லை என்றும், அய்யப்பனை தரிசிக்காமல், வீடு திரும்ப கூடாது என தீர்மானித்ததால், சன்னிதானம் சென்றதாகவும், கனகதுர்கா தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com