

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.