திடீரென கன்னடத்தில் பேசிய கமல் - வைரலாகும் வீடியோ
சினிமா துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நடிகர் சிவராஜ்குமாருக்கும், தனக்கும் 50 வருடங்கள் பழக்கம் என்றும், அவர் தன் மீது காட்டிய அன்பு தான் எதிர்பாராத ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமார் கடந்த 40 வருடங்களில் மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்திருப்பதாகவும், இனியும் அவர் சாதிக்க போகும் விஷயங்கள் தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும் என்றும் குறிப்பிட்டு கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story