#JUST IN || இன்று முதல் அதிரடி விலை குறைப்பு

#JUST IN || இன்று முதல் அதிரடி விலை குறைப்பு
Published on

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் 92 ரூபாய் 50 காசுகள் குறைந்த நிலையில் இந்த மாதம் மேலும் 157 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளன.

வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை முன்னெப்போது இல்லாத வகையில் இரண்டு தினங்களுக்கு முன் 200 ரூபாயை மத்திய அரசு குறைத்தது. இதனிடையே,

சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் மாற்றி அமைத்து வரும் நிலையில், மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றனர். அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 157 ரூபாய் 50 காசுகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதனையடுத்து, 1852 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

கடந்த பல மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றம் இல்லாமல் இருந்து வந்தன. கடந்த 2 நாளுக்கு முன் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 14.2 கிலோ கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைத்து, 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com