Josiyar Pocso Case Arrest | பரிகாரம் கூறி 16 வயது சிறுமியிடம் `காமவெறி’ காட்டிய `பிரபல ஜோதிடர்’
பரிகாரம் கூறி 16 வயது சிறுமியிடம் `காமவெறி’ காட்டிய `பிரபல ஜோதிடர்’
போக்சோ வழக்கில் கைதான ஜோதிடர் மீது திருநங்கை பரபரப்பு புகார் கேரளாவில் 16 வயது சிறுமிக்கு பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து கைதான பிரபல ஜோதிடர், அரபு நாட்டில் திரைப்படம் எடுப்பதாக ஆசை வார்த்தை கூறி தனக்கு வலை வீசியதாக திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பரிகாரம் செய்வதாக கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ராஜன் பாபு என்ற ஜோதிடரை, கடந்த சில தினங்களுக்கு முன் போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். அந்த ஜோதிடர், படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அரபு நாட்டில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் கூறி தனது நண்பர் மூலமாக தனிமையில் இருக்க அழைப்பு விடுத்ததாக திருநங்கை குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
