

ஜே.என்.யு மாணவர் பேரவை முன்னாள் தலைவர், கன்னையா குமார் மீதான தேசத்துரோக வழக்கை, குறிப்பிட்ட கால வரம்புக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க, டெல்லி அரசுக்கு உத்தரவிடக்கோரி, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நந்தகிஷோர் கர்க் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனு, தலைமை நீதிபதி போப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி போப்டே, குறிப்பிட்ட விஷயத்தையும், அது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிகாட்டாமல் பொதுவான கோரிக்கையை கொண்ட மனுவை, விசாரிக்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.