ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் முடியும் நிலையில் விரைவில் மருத்துவமனை சென்று ஆய்வு மேற்கொள்ள ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை பிற நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களின் தகவல் அடிப்படையில் அப்பல்லோவில் நேரடி ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த தகவல்களை உறுதி செய்யமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.