170 கிமீ ஆன்மிக பயணத்தை முடித்தார் ஆனந்த் அம்பானி - துவாரகாவில் சாமி தரிசனம்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, துவாரகா கோயிலில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார்தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, துவாரகா கோயிலில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார். ஆனந்த் அம்பானி, தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். சுமார் 170 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆன்மிக யாத்திரையை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், துவாரகாவில் அமைந்துள்ள துவாரகாதீசர் கோயிலில் தனது யாத்திரையை ஆனந்த் அம்பானி நிறைவு செய்து, அங்கு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.
Next Story
