"மோடிக்கு 'பாரத ரத்னா' விருது" வழங்க பா.ஜ.க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"மோடிக்கு 'பாரத ரத்னா' விருது" வழங்க பா.ஜ.க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
Published on

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் மாநிலத்தின் இரண்டாக பிரிக்கும் மசோதா மாநிலங்களவையில் வெற்றி பெற்றது. இது பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ராட்லம் தொகுதி பா.ஜ.க எம்.பி. குமான்சிங் தோமர் கூறும்போது, காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி ,மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றார். காஷ்மீர் விவகாரத்தில் மோடியை பாராட்டும் விதமாக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இவரது கருத்தை ரவிகிஷண், பிரக்யாசிங் தாக்கூர், விஜய்குமார் துபே, விஷ்ணு தத் சர்மா உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்களும் வரவேற்றுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com