ஜம்மு காஷ்மீர் விவகாரம் - இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி இன்று நடத்த இருக்கும் அனைத்து கட்சிக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் - இன்று அனைத்து கட்சிக் கூட்டம்
Published on

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி இன்று நடத்த இருக்கும் அனைத்து கட்சிக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி லோக் கல்யாண் மார்க் இல்லத்தில், பிரதமர் மோடி தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத், மக்கள் மாநாட்டு கட்சியின் சஜத் லோனே, ஜம்மு - காஷ்மீர் அப்னே கட்சியின் சையத் அல்டாப் புகாரி, ஜம்மு - காஷ்மீர் பேந்தர்ஸ் கட்சி தலைவர் ம் சிங் போன்ற முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த 2019 ஆகஸ்ட் 5ல், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு,

சட்டப்பிரிவு - 370, 35ஏ ஆகியன செயலிழக்க வைக்கப்பட்ட பின், முதன் முறையாக அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை மோடி சந்திக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com