

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகம் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு தேதிகளை மாற்றி அமைக்கவும் கோரி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் 30 ஆவது நாளை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.