மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர் பட வில்லன்
கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவு தொடர்பாக, நடிகர் விநாயகன் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் அவர் மறைந்த ராஜீவ் காந்தி, கருணாகரன் உள்ளிட்டோரின் பெயர்களை மலையாளத்தில் குறிப்பிட்டு இருந்ததாக தெரியவருகிறது. இந்த சூழலில், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ள இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர், அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
