Jagdeep Dhankhar | அரசியலமைப்பின் முகவுரை மாற்றம் - ஜகதீப் தன்கர் கண்டனம்
ஒரு நாட்டின் அரசியலமைப்பின் முகவுரை என்பது மாற்ற முடியாதது, ஆனால் இந்திய அரசியலமைப்பின் முகவுரை கடந்த 1976ஆம் ஆண்டு மாற்றப்பட்டது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒரு நாட்டின் அரசியலமைப்பின் முகவுரைதான், அதன் ஆன்மா என்றும், அந்த முகவுரை தனித்துவமானது என்றும் குறிப்பிட்டார்.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை, கடந்த 1976-ஆம் ஆண்டு, எமர்ஜென்சி காலத்தில், 42-ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டு, அதில் சோசலிச, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் அரசியலமைப்பின் முகவுரைகள் மாற்றப்படவில்லை என்றும் ஜகதீப் தன்கர் கூறினார்.
Next Story
