Jadeja | Modi | RSS | `RSS' குறித்து ஜடேஜா சொன்ன வார்த்தை
உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு ஆர்எஸ்எஸ் என கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் X தள பதிவில், ஆங்கிலேயர்களாலும் பல்வேறு சித்தாந்தங்களாலும் நாட்டின் கலாச்சாரம் சுரண்டப்பட்ட நிலையில், அதன் விளைவாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். சமூகத்தின் பல்வேறு துறைகளில் ஆர்எஸ்எஸ் தனது பங்களிப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜடேஜா, ஆர்எஸ்எஸ்-ல் பயணித்தவர்கள் தேசத்தை கட்டி எழுப்புவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பிரதமர் மோடி என்றும் கூறியுள்ளார்.
Next Story
