

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல , மகர விளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். எருமேலியில் இருந்து சன்னிதானம் வரை
24 மணி நேரமும் சுகாதார சேவைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் 16ந்தேதி அதிகாலை புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டல பூஜைகள் துவங்கும். இதையடுத்து தினமும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.