``ஒரு MLA பண்ற வேலையா இதெல்லாம்’’ - அசிங்கத்தின் உச்சம்.. அரசியல் அரங்கில் பூகம்பம்
கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூட்டத்தில் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராகுல் மாங்கூட்டத்தில் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஹோட்டலுக்கு வருமாறு அழைத்ததாகவும் மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, ராகுல் மாங்கூட்டத்திலை, 6 மாதங்கள் இடைநீக்கம் செய்து கேரள மாநில காங்கிரஸ் உத்தரவிட்டது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ராகுல் மாங்கூட்டத்தில் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும், BNS சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
