காபி ஷாப்பில் களேபரம் ஒரு TEA Cup-க்கா?

x

பெங்களூருவில் கூடுதல் டீ கப் தராத கடை ஊழியரை வாடிக்கையாளர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள பிரபல டீக்கடைக்கு வந்த நான்கு பேர் காபி ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த ஊழியரிடம், அவர்கள் கூடுதலாக கப் கேட்டதாக கூறப்படும் நிலையில் அதற்கு ஊழியர் தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், ஊழியரை அவரது இடத்திற்கே சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர். இது குறித்த சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சேஷாத்ரிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்