``அமெரிக்கா வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கும் தொடர்பா?''
அமெரிக்காவின் வரி விதிப்புக்கும், ஜி எஸ் டி சீர்திருத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அமெரிக்கா இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்திருப்பதால் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறுவது தவறு என தெரிவித்தார். தாங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வரி விகிதக் குறைப்புக்காக குழுக்கள் அமைத்து பணியாற்றி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Next Story
