இந்தியாவில் இளைஞர்கள் திடீர் திடீரென மரணமடைய கொரோனா தடுப்பூசி காரணமா? - ICMR பதில்

x

கொரோனா தடுப்பூசி மரணங்கள் குறித்த ஆய்வு நடத்தி, அதுகுறித்த அறிக்கையை இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் வெளியிட்டுள்ளது. அதில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல், நடப்பாண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை உயிரிழந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்டோரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி காரணமாக, இந்தியாவில் இளைஞர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படவில்லை எனவும், கொரோனா தடுப்பூசி மரணத்திற்கான வாய்ப்பை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் திடீர் மரணங்களுக்கு கொரோனாவுக்கு எடுத்துக் கொண்ட சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், வாழ்க்கை முறை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என்றும் ஐ.சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்