Russia | India | PM Modi | பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் இவ்ளோ மாஸா?

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் இவ்ளோ மாஸா?

Russia | India | PM Modi | பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் இவ்ளோ மாஸா? #russia #India #pmmodi #InternationalConference #thanthitv பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யாவிற்கு வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு காலத்தால் சோதிக்கப்பட்ட ஒரு வலுவான நட்புறவு என்றும், இது உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 60 பில்லியன் டாலரை எட்டியுள்ள நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் இதனை 100 பில்லியன் டாலராக உயர்த்த இரு நாட்டுத் தலைவர்களும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com