Payir Kadan | Cibil Score | இனி விவசாய கடன் வாங்க `சிபில் ஸ்கோர்’ கட்டாயமா?
சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி, இதை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என கூட்டுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
இதர வங்கிகளில் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் கொடுக்கப்படவில்லை மற்றும் கடன் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story