இடி போன்று விழுந்த இரும்பு - நடுரோட்டில் மயங்கி விழுந்த இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை அடுத்த பிம்ப்ரி சிஞ்ச்வாடி பகுதியில், பைக்கில் சென்ற இளைஞரின் தலையில் லாரியிலிருந்து இரும்பு பொருள் விழுந்ததால் பலத்த காயமடைந்தார். மேம்பாலத்தின் மீது லாரி ஏற முயன்றபோது தடுப்பு சுவர் மீது மோதியதில், இரும்பு பொருட்கள் சிதறி பைக்கில் சென்ற இளைஞரின் தலையில் விழுந்தன. இதனால் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com