ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.