புதுச்சேரியில் மர உச்சி மீது ஏறி போதை ஆசாமி அட்டகாசம்
புதுச்சேரியில் மர உச்சி மீது ஏறி போதை ஆசாமி அட்டகாசம்
புதுச்சேரி சுப்பையா சாலையிலுள்ள மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு, 4 மணி நேரத்திற்கும் மேலாகக் கீழே இறங்காமல் தீயணைப்பு வீரர்கள் மீது மதுபாட்டில்களை வீசி அட்டகாசம் செய்த ஒடிஷாவை சேர்ந்த கூலி தொழிலாளியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்க காவல்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அந்த வழியாக வந்த அனிஷ் என்ற வடமாநில பலூன் வியாபாரி துணிச்சலாக மரத்தில் ஏறி நைசாக பேசி போதை ஆசாமியின் காலில் கயிறு கட்டி அவரை பத்திரமாக கீழே இறக்கினார்.
