Internet Ban | Manipur Tension | ``ரத்து.. 3 நாட்கள் நெட் கிடைக்காது’’
``ரத்து.. 3 நாட்கள் நெட் கிடைக்காது’’
மணிப்பூரில் 3 நாட்களுக்கு இணைய சேவை ரத்து மணிப்பூரில் பதற்றத்தை தணிக்க இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தவுபால், காக்சிங் மற்றும் விஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இணைய சேவையை ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விஷ்ணுபூர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், இரண்டு அப்பாவிச் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
