

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில், தியானத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அன்னை பிறந்த நாளையொட்டி, மகான் அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகள் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.