சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை செப்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு

சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வந்தே பாரத திட்டத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்லும் சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதித்த வழித் தடங்களில் விமானங்கள் இயக்க தடை இல்லை எனவும், சரக்கு போக்குவரத்து சேவை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com