"இடைக்கால பட்ஜெட் : துவக்கம் மட்டுமே" - பிரதமர் மோடி பேச்சு

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விரிவான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
"இடைக்கால பட்ஜெட் : துவக்கம் மட்டுமே" - பிரதமர் மோடி பேச்சு
Published on
மேற்கு வங்க மாநிலம், தாகுல்நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், மகாராஷ்டிரா அரசு, இரண்டரை லட்சம் ரூபாய் பயிர்கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்து விட்டு, தற்போது விவசாயிகளுக்கு தலா 13 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்திருப்பதாக புகார் கூறினார். தற்போது தமது அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சலுகைகள் வெறும், துவக்கம் மட்டுமே என்றும், பல்வேறு துறையினரும் பயனடையும் விரிவான பட்ஜெட்டை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தாக்கல் செய்வோம் என்றும் பிரதமர் உறுதிபடக் குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com