நிர்வாண வீடியோ.. ரூமுக்குள் டார்ச்சர்.. மாடல் அழகி செய்த அசிங்கம் - லீலையை காட்டிய இன்ஸ்டா வீடியோ

நிர்வாண வீடியோ.. ரூமுக்குள் டார்ச்சர்.. மாடல் அழகி செய்த அசிங்கம் - லீலையை காட்டிய இன்ஸ்டா வீடியோ
Published on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஷீலாநகரைச் சேர்ந்த இளைஞருடன், மாடல் அழகி ஜாய் ஜமீமா என்பவர், இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலைவிரித்து, திருமணம் செய்து வைக்குமாறு அவரது குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இதனை மறுத்த இளைஞரின் பெற்றோர், அவரை அழைத்துக்கொண்டு அமெரிக்காவில் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளைஞரை மீண்டும் விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்த ஜமீமா, தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து, நெருக்கமாக இருப்பது போன்று ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த இளைஞரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டிப்போட்டு கத்தியால் குத்தி சித்ரவதை செய்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து தப்பிச் சென்ற இளைஞர் அளித்த புகாரின்பேரில், ஜமீமாவை கைது செய்த போலீசார், இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனக்கூறி, ஜமீமாவின் இன்ஸ்டா வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com