"திருப்பதி கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் ஆய்வு"

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் குறித்து இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வறிக்கை வெளியிடப்போவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
"திருப்பதி கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் ஆய்வு"
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகள் மற்றும் கணக்குகள் குறித்து இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வறிக்கை வெளியிடப்போவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திருப்பதி கோயிலில் நீதிபதிகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். இதன் மூலம் கோவிலின் ஆபரணங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்க முடியாதவர்கள், கோவிலை வைத்து வீண்பழி சுமத்துவதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, சுவாமியின் நகைகளை பக்தர்களின் பார்வைக்கு வைக்க கூடாது என ஆகம ஆலோசகர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com