ஞானவாபி மசூதியில் ஆய்வு - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | Uttar Pradesh

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், தொல்லியல் துறை அதிகாரிகள், இன்று காலை ஆய்வை தொடங்கியுள்ளனர். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், தொல்லியல் துறை அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள், இன்று காலை ஆய்வுப்பணியை தொடங்கினர். இதையொட்டி, ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com