இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம்

x

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது, SC-ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் நிறுவன வாரியத்தில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியரான துர்கப்பா என்பவர், கோபாலகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன், பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி தன்னை பணிநீக்கம் செய்ததாகவும், சாதிய ரீதியாக தன்னை அச்சுறுத்தியதாகவும் துர்கப்பா தெரிவித்துள்ளார். இதையடுத்து உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது, SC-ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்