

பணவீக்கத்தின் அடிப்படையிலான மொத்த விலை குறியீடுகள் நவம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளன. மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், உணவுப் பொருட்களின் விலை 4 புள்ளி 47 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த பணவீக்க உயர்வுக்கு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அனைத்து பொருட்களும் நவம்பர் மாதத்தில் விலை உயர்ந்ததால் கடந்த வாரம் வெளியான சில்லரை பணவீக்கம் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 புள்ளி 54 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.