ஒரே நாளில் 13,000 பேருக்கு தொற்று... தீவிரத்தை உணர்ந்து மே.17 வரை ஊரடங்கு

தலைநகர் டெல்லியில், ஒரே நாளில் 13 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 13,000 பேருக்கு தொற்று... தீவிரத்தை உணர்ந்து மே.17 வரை ஊரடங்கு
Published on

தலைநகர் டெல்லியில், ஒரே நாளில் 13 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.டெல்லியில் ஒரே நாளில்13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மொத்த எண்ணிக்கை என்பது 13 லட்சத்து 23 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 273 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் 86 ஆயிரத்து 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com