

கல்வன் பள்ளத்தாக்கு பகுதி சீன இறையாண்மைக்கு உட்பட்டது என்ற சீன அறிக்கையை ஏற்க முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா விளக்கம் அளித்துள்ளார். கிழக்கு லடாக்கில் நடைபெற்ற அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து சீன அதிகாரிகள் உடன் தொலைபேசி மூலம் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டு மொத்த சூழ்நிலையையும் பொறுப்பான முறையில் கையாள வேண்டும் என்று கடந்த 6 ஆம் தேதி மூத்த தளபதிகள் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வுகளை நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதை சுட்டிக்காட்டி உள்ள வெளியுறவு அமைச்சகம், மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வுகளை உருவாக்குவது இந்த புரிதலுக்கு முரணானது என்றும், கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தில் சீனாவின் பதில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.